உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மொறுமொறு முந்திரி முறுக்கு

மொறுமொறு முந்திரி முறுக்கு

மாலை நேரத்தில் காபி அல்லது டீயுடன் நொறுக்கு தீனி தின்பது, பலரின் அன்றாட பழக்கங்களில் ஒன்றாகவே இருக்கும். பெரும்பாலான வீடுகளில் பேக்கரி தின்பண்டங்கள், முறுக்கு, தட்டை என, பல விதமான பலகாரங்கள் இருக்கும்.தினமும் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சாப்பிட்டால் பணமும் காலியாகும்; உடல் ஆரோக்கியமும் பாழாகும். பணம் செலவிட்டு ஆரோக்கியத்தை பாழாக்குவதை விட, வீட்டிலேயே ஆரோக்கியமான, சுவையான, 'மொறுமொறு முந்திரி' முறுக்கு செய்யலாமே!எப்படி செய்வது என, பார்க்கலாமா?

செய்முறை

முதலில் முந்திரி பருப்பை மிக்சியில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்கள். நிலக்கடலையை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் அதை மிக்சியில் அரைத்து, முந்திரி பருப்பு மாவு வைத்துள்ள அதே பாத்திரத்தில் போடுங்கள்.மாவு கலவையில் அரிசி மாவு, பெருங்காயம், கருப்பு எள், மிளகாய் துாள், நெய், சுவைக்கு தேவையான உப்பு போட்டு, சிறிது நீர் சேர்த்து, முறுக்கு மாவு பதத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை, முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் போட்டு பொறித்தால், சுவையான முந்திரி முறுக்கு தயார். வாயில் போட்டவுடன், வெண்ணெயாய் கரையும். குட்டீஸ்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை