உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பழுத்த வாழைப்பழத்தில் சுவையான பன்

பழுத்த வாழைப்பழத்தில் சுவையான பன்

வாழைப்பழங்கள், குறைந்த விலையில் அதிகமான புரத சத்துக்களை அளிக்கின்றன. இதனால், தினமும் உணவுக்கு பின், ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். வாழைப்பழம் இல்லாத வீடுகள் இருக்காது. வாழைப்பழங்களை அதிக நாட்கள் சேகரித்து வைக்க முடியாது; அதிகம் பழுத்துவிடும்; அழுகிப்போகும். சாப்பிட முடியாமல் வீசியெறிவர். அதிகம் பழுத்த வாழைப்பழத்தை வீசியெறிய வேண்டாம். அதில் சுவையான பன் செய்யலாம். தயாரிப்பதும் எளிது. செய்முறை முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி, பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக பிசையுங்கள். இதில் சீரகம், தயிர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து மீண்டும் பிசையவும். அதன்பின் மைதா, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு மிருதுவாக பிசையவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பிசைந்த மாவு மீது, எண்ணெய் தடவி மூடி எட்டு மணி நேரம் ஊற விடவும்; பிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெளியிலேயே வைக்க வேண்டும். அதன்பின் மீண்டும் மாவை பிசைய வேண்டும். தேவையான அளவில் உருண்டை பிடியுங்கள். சப்பாத்தி கட்டையில் சிறிதளவு மைதா மாவை தடவி, அதன் மீது உருண்டைகளை போட்டு வட்டமாக தட்டவும். இது தடிமனாக இருக்க வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து, பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுத்தால், சுவையான 'வாழைப்பழ பன்' ரெடி. தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடலாம். மைதாவுக்கு பதிலாக, கோதுமை மாவும் பயன்படுத்தலாம். புளித்த தயிர் சேர்த்தால், பன் மிகவும் மிருதுவாக இருக்கும். இந்த தின்பண்டத்தை செய்வது எளிது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி