உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ஆரோக்கியம் அளிக்கும் முள்ளங்கி சாலட்

ஆரோக்கியம் அளிக்கும் முள்ளங்கி சாலட்

நாம் சாப்பிடும் காலை சிற்றுண்டி, நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காலை ஆரோக்கியமானதாக, ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம். பலரின் வீடுகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் கலந்த சாலட் சாப்பிடுவது வழக்கம். முள்ளங்கி சாலட்டும் பிரமாதமாக இருக்கும்.

செய்முறை

முள்ளங்கி, குடை மிளகாய், கேரட்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அதன்பின் ஆலிவ் ஆயில், எலுமிச்சை ரசம், உப்பு, மிளகு துாள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை போட்டு நன்றாக கலக்கவும்.இதனை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், முள்ளங்கி சாலட் தயார். இதை வீட்டினருக்கு பரிமாறவும். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியானது. காலை சிற்றுண்டிக்கு ஏற்றது. சிவப்பு அல்லது வெள்ளை நிற முள்ளங்கிகளை பயன்படுத்தலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை