உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  தேங்காய் பால் அரிசி ரொட்டி செய்வது இப்படி தான்!

 தேங்காய் பால் அரிசி ரொட்டி செய்வது இப்படி தான்!

- நமது நிருபர் -: தினமும் காலை சிற்றுண்டிக்கு, என்ன செய்வது என, அம்மாக்கள் சிந்திப்பது வீடுகளில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும். குறைந்த நேரத்தில், அவசரமாக சமைக்க வேண்டியிருக்கும். அது, ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், தேங்காய் பால் அரிசி ரொட்டி செய்து பாருங்கள். செய்முறை முதலில், ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சுவைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக பிசையவும். இந்த கலவையில் தேங்காய் பால், சிறிதளவு நீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். அதன் பின், இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியை போட்டு கலக்கவும். தோசை மாவு பதத்தை விட, கெட்டியாக இருக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் அல்லது நெய் தடவவும். காய்ந்ததும், ஏற்கனவே தயார் செய்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தால், சுவையான தேங்காய் பால் அரிசி ரொட்டி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் பொருத்தமாக இருக்கும். சிறார்களுக்கு பள்ளிக்கு மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம். செய்வதும் மிகவும் எளிது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !