உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / செர்ரி பழங்களை அதிகமாக சாப்பிடக் கூடாது - ஏன் தெரியுமா..?

செர்ரி பழங்களை அதிகமாக சாப்பிடக் கூடாது - ஏன் தெரியுமா..?

செர்ரி என்பது சிவப்பு நிறத்தினாலான சிறிய வடிவிலான பழம். இந்த பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இந்த பழத்தில், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் A,K,C மற்றும் B1 ஆகியவை உள்ளன. இவ்வளவு சத்துள்ள பழத்தை ஏன் அதிகமாக சாப்பிடக் கூடாது என்று தானே நினைக்கிறீர்கள். வாருங்கள் பார்க்கலாம்...அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதுபோலத்தான், செர்ரி பழமும். நீங்கள் செர்ரி பழங்களை சாப்பிட்டு உங்கள் வயிறு பாதிக்கப்பட்டால், நீங்கள் அதை அதிகளவில் சாப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். செரிமான கோளாறு உள்ளவர்கள் இதனை குறைவாக உண்ணுவதே நல்லது.அதேபோல், அதிகப்படியான செர்ரி பழங்களை சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். உதடுகளில் அரிப்பு, வாய் பகுதியில் வீக்கம் ஆகியவை உண்டாகலாம், மேலும் அதிகமாக சாப்பிடும் போது, தொண்டையை அடைக்கவும் வாய்ப்புள்ளது.செர்ரி பழங்களில் இயற்கையான சர்க்கரை இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் அதனை அதிகமாக உட்கொள்ள கூடாது. எப்போதாவது சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும், செர்ரி பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குமட்டல், வாந்தி மற்றும் ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செர்ரி பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்க மெழுகு பூசப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இதற்கு மாற்றாக நமது நாட்டு நெல்லிக்காய்களை சாப்பிடுவதன் மூலம், செர்ரியில் உள்ள அனைத்து சத்துகளும் கிடைக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ