உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / ஐந்தே நிமிடத்தில் பொரி ஸ்வீட்

ஐந்தே நிமிடத்தில் பொரி ஸ்வீட்

வீட்டில் ஏதாவது விசேஷ நாட்களில் கடவுளின் புகைப்படங்கள் முன்பு, பொரியை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் பொரியை நிறைய வாங்கி யாரும் சாப்பிடாமல் போனால், அப்படியே மிச்சம் இருக்கும். இல்லத்தரசிகள் பொரியை எப்படி காலி செய்வது என்று தெரியாமல் யோசிப்பர். இனி அந்த கவலை வேண்டாம். பொரியில் சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.மொறு, மொறு என இருக்கும் பொரியை தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். மிக்சியில் போட்டு, அதனுடன் 10 முந்திரி அல்லது வேர்க்கடலை சேர்த்து, நன்கு அரைத்து பொடியாக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.பின், மிக்சியில் தேவைப்படும் அளவு சர்க்கரை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். அதன்பின் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையுடன் தேவையான அளவு பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.இதனுடன் முதலில் பொடியாக்கி வைத்திருந்த, பொரி கலவையை எடுத்து கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் பவுடர் கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாக, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும்.ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்த மாவை, நெய்யுடன் சேர்த்து வட்டமாக ஆக்கவும். பின், கத்தியை வைத்து கேக் வெட்டுவது போல வெட்டி, தட்டில் வைத்து சாப்பிடலாம். அடுப்பை பற்ற வைக்காமலேயே இந்த ஸ்வீட் தயார் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி