உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / வேகஸ் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகள்..!

வேகஸ் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகள்..!

மூளையையும் உடலையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ள நரம்பு பாதையை வேகஸ் நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு செரிமானம், இதய துடிப்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது, தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் மனத் தெளிவு குறைதல் போன்ற உடல் அறிகுறிகள் தோன்றும். ஆகையால் இந்த நரம்பை வலுப்படுத்த தேவையான ஊட்டச்சத்து அவசியமாகும். வேகஸ் நரம்பை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகள் குறித்து அறிந்து கொள்வோம்.

கோலைன்

கோலைன் சத்து நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இவை ஆறிவாற்றல் திறன் அதிகரிப்பு மற்றும் இதயத்தை பாதுகாக்கிறது. சிவப்பு இறைச்சி மற்றும் மீன்களில் இவை அதிகம் உள்ளது. இதில் உள்ள பாரோரெஃப்ளெக்ஸ் உணர்திறனை மீட்டெடுக்க உதவுகிறது.

வைட்டமின் பி12

வேகஸ் நரம்பின் ஆரோக்கிய மூலமாக வைட்டமின் பி12 உள்ளது. பால், முட்டையில் இந்த ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஈடுசெய்யப்படும்.

மெக்னீசியம்

பச்சை இலைக் காய்கறிகளில் ஏராளமாகக் காணப்படும் மெக்னீசியம் உள்ளது. இது தசைச் சுருக்கம்,ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சோடியம்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம், தசைச் சுருக்கம், நரம்பியல் செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் போன்ற பல உடலியல் செயல்முறைகளுக்கு உதவுகிறது.

ஒமேகா-3

சியா விதைகள், அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றில் காணப்படும் ஒமேகா-3 ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை