மேலும் செய்திகள்
குளிர்காலத்தில் கைகொடுக்கும் வீட்டுவைத்தியம்
15-Nov-2026
தேனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
15-Nov-2026
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்
14-Nov-2026
அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட 6 காரணங்கள்
31-Oct-2026
கோடையில் பலரும் அதிகமாக விரும்பிச்சாப்பிடும் பானமாக மோர் உள்ளது. கொளுத்தும் கோடையில் நம் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும் போது, வெயிலின் தாக்கத்தை தவிர்த்து நீரேற்றமாக வைக்க உதவுகிறது. சர்க்கரை, கஃபைன் பானங்களை விட பல்வேறு ஆரோக்கிய சத்துக்கள் மோரில் இருப்பது அனைவரும் அறிந்ததே. 100 மி.லி., மோரில் 40 கலோரிகள் உள்ளன. இதில், வெண்ணெய் நீக்கப்படுவதால் பாலை விட குறைவான கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளன; புரதம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மோர் விரைவாக நம் உடலை குளிர்விக்கிறது. வெயில் கொளுத்தி எடுக்கும் கோடையில் சீரகம், புதினா மற்றும் உப்பு சேர்த்து ஒரு கிளாஸ் மோர், குடிக்கும் போது, தாகம் தணிவது மட்டுமின்றி, நம் உடலும் குளிர்ச்சியடைகிறது. மோர், தயிர், உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையானது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களின் அளவை சமன் செய்கிறது. இதனால், மோர் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், நீரிழப்பை தடுக்க உதவுகிறது. மோரிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் செரிமானத்துக்கு உதவுவதுடன், உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் தவிர்க்கப்படுவதுடன், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், வயிறு தொற்று, லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. இது அதிக ஆற்றலை அளிப்பதுடன், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மோரில் உள்ள ரிபோஃப்ளேவின் என்பது உங்கள் உடலின் ஆற்றல் உற்பத்தி அமைப்புகளுக்கு இன்றியமையாத வைட்டமின் பி ஆகும். இது உடலின் அமினோ அமிலங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது; புரதங்களை உருவாக்குகிறது.
15-Nov-2026
15-Nov-2026
14-Nov-2026
31-Oct-2026