ஹாவேரி பங்காபுரா மயில்களின் சரணாலயம்
கர்நாடகாவில் இரண்டு மயில் சரணாலயங்கள் உள்ளன. ஒன்று, ஆதிசுஞ்சனகிரியிலும், மற்றொன்று பங்காபுரா கோட்டையிலும் உள்ளன.ஹாவேரி மாவட்டம் பங்காபுரா கோட்டை அருகில் அமைந்து உள்ளது பங்காபுரா மயில்கள் சரணாலயம். இந்த சரணாலயம் மயில்களை பாதுகாப்பதிலும், இனப்பெருக்கம் செய்வதிலும் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 2வது சரணாலயமாகும்.இதை புரிந்து கொண்ட மத்திய அரசு, 2006 ஜூன் 9ல் பங்காபுராவை மயில்களின் சரணாலயமாக அறிவித்தது. இங்கு வருபவர்கள் நம் தேசிய பறவையான மயில் கூட்டத்தை ஒரே இடத்தில் பார்க்கலாம்.139 ஏக்கரில் அமைந்து உள்ள இந்த சரணாலயத்தில், இன்னுமும் பங்காபுரா கோட்டையின் வரலாற்று நினைவுகளை காணலாம். உயரமான மேடுகள், ஆழமான அகழிகளும் மயில்களுக்கு சரியான இடத்தை வழங்கி உள்ளன.முதல் உலக போருக்கு பின், 1919ல் அமைக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு பண்ணையில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.இங்கு 1,000க்கும் அதிகமான மயில்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் மயில்கள் மட்டுமின்றி, ஆந்தை, பச்சை தேனீ உண்ணி, புள்ளி மைனா, புள்ளி புறா, கிளிகள், கிங்பிஷர் போன்ற பல பறவைகளின் இருப்பிடமாகமும் உள்ளது.தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இந்த சரணாலயம் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், பல்லாரிக்கு சென்று, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.ரயில் செல்வோர், பங்காபுரா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 1.1 கி.மீ., தொலைவில் உள்ள சரணாலயத்திற்கு ஆட்டோ செல்லலாம்.பஸ்சில் செல்வோர், பங்காபுரா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2.1 கி.மீ., தொலைவில் உள்ள சரணாலயத்திற்கு ஆட்டோவில் செல்லலாம்.