தொழில்முனைவோர்கள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
இன்றைய போட்டி நிறைந்த சூழலில், சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, அதில் உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுபவரே வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வர முடியும். தொழில்முனைவோர்கள் பார்க்க தவறவிட கூடாத 10 திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்1. தி பர்சூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) :2006ல் வெளியான இப்படத்தில் வில் ஸ்மித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பா - மகன் பாசப்போராட்டம், பல பிரச்னைகளுக்கு மத்தியில், சவாலை கடந்து வில் ஸ்மித் தனது லட்சியத்தை அடைந்தாரா என்பதை பல உணர்வுகளுடன் வெளிப்படுத்திய படம். 2. தி சோஷியல் நெட்வொர்க் ( The Social Network)2010ம் ஆண்டு வெளியான சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவருமான மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். எப்படி விளையாட்டாக ஆரம்பித்த பேஸ்புக், சாதித்தது என்பதையும், அதற்காக ஸ்க்கர்பர்க் செய்த வேலைகளையும் படம் பேசுகிறது.3. தி ஃபவுண்டர் (The Founder) :2016ம் ஆண்டு வெளியான இப்படம், மில்க்ஷேக் இயந்திர விற்பனை பிரதிநிதியாக துவங்கி, வாழ்க்கையில் பல தொழில்களை செய்து ,தனது 59வது வயதில் மெக்டொனால்டு நிறுவனத்தை வாங்கி, அதன் வாயிலாக சாதித்த ரே க்ரோக்கின் கதை தான். திறமை, அறிவு, கல்வி மட்டும் போதாது. விடாமுயற்சியும், மன உறுதியும் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற வைக்குமென்பதை ஆணித்தரமாக கூறும் படமாக அமைந்துள்ளது.4. தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டீரிட் : (The Wolf of Wall Street) :2013ல் வெளியான இப்படம், பங்குச்சந்தை புரோக்கராக இருந்து மிகப்பெரும் கோடீஸ்வராக மாறும் ஜோர்டன் பெல்போர்ட்டின் கதை தான் இப்படம். பணம், செக்ஸ், போதை போன்றவற்றிற்கு அடிமையாக மாறும் கேரக்டரில் லியார்னோடா காப்ரியல் கலக்கியிருப்பார். மார்க்கெட்டிங்கில் வல்லவரான ஜோர்டன், 10 பேருடன் புதிய நிறுவனத்தை துவங்கி பெரிய நிறுவனமாக வளர்ந்தெடுப்பார். பின்னர் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்வி, சவால்கள் என படம் செல்லும்.5. மணிபால் (Moneyball) :2011ல் வெளியான இப்படம், ஓக்லாண்ட் அணியின் மேலாளர் பில்லி பீனின் வெற்றிகரமான முயற்சியின் கதை. ஒரு பேஸ்பால் கிளப்பை ஒரு பட்ஜெட்டில் தனது வீரர்களை உருவாக்குவதற்கு கணினி மூலம் உருவாக்கப்பட்ட பகுப்பாய்வை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் படம். பில்லி பீனாக, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்திருப்பார்