உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 2 வெள்ளி பதக்கங்களுடன் சென்னை திரும்பிய எட்வினாவுக்கு தடபுடல் வரவேற்பு

2 வெள்ளி பதக்கங்களுடன் சென்னை திரும்பிய எட்வினாவுக்கு தடபுடல் வரவேற்பு

2 வெள்ளி பதக்கங்களுடன் சென்னை திரும்பிய எட்வினாவுக்கு தடபுடல் வரவேற்பு / Chennai / Edwina wins silver in the Asian Games பக்ரைன் நாட்டில் கடந்த 19ம் தேதி முதல் ஆசிய இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 19 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணியில் பங்கேற்ற நெல்லையை சேர்ந்த எட்வினா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலே என 2 போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கங்களுடன் சென்னை திரும்பிய எட்வினாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை