திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Maha vishnu temple kumbabhishekam | puthurvayal | Nilgiris
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / Maha vishnu temple kumbabhishekam / puthurvayal / Nilgiris நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் அருகே உள்ள 600 ஆண்டு பழமையான மகாவிஷ்ணு கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி சிறப்பு பூஜைகள் மற்றும் உச்ச பூஜைகள் நடைபெற்றன. மாலை மஹா தீபாரதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன், கலச அபிஷேகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3:55 மணிக்கு கணபதி ஹோமம், சுப பிரிதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முடிந்து காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது இரண்டு கருடன்கள் வானில் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை மஹா தீபாராதனை மற்றுமு் திருவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி வரை தினமும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.