உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Srinivasa perumal Chariot | Meenakshi Puram | Madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Srinivasa perumal Chariot | Meenakshi Puram | Madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / Srinivasa perumal Chariot / Meenakshi Puram / Madurai மதுரை மீனாட்சிபுரம் 2வது தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவஸ்தானம். இக்கோயில் சௌராஷ்டிரா பிராமண தர்ம பரிபாலன சபைக்கு பாதிக்கப்பட்டது. இதன் ஆனி மாத பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் நாள் விழாவான கடந்த 19ம் தேதி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் 9ம் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக திருத் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் முன்பு சீனிவாசப் பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் காமராஜர் சாலை, நெல்பேட்டை, இஸ்மாயில் புரம் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சௌராஷ்டிரா பிராமண தர்ம பிரிபாலன சபை நிர்வாகிகள் சிறப்பாக செய்திந்தனர்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை