உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கண்மாயை துார்வாருவது எப்போது? | Vandiyur Kanmai is a tourist spot | CM Stalin Interest

கண்மாயை துார்வாருவது எப்போது? | Vandiyur Kanmai is a tourist spot | CM Stalin Interest

கண்மாயை துார்வாருவது எப்போது? | Vandiyur Kanmai is a tourist spot | CM Stalin Interest | ₹50 crore allocation | Madurai மதுரை மாநகராட்சி சார்பில் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாய் சுந்தரம் பூங்கா 50 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா தலமாக்கும் பணி துரிதமாக நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சுந்தரம் பூங்காவை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிதாக அமையும் சுற்றுலா தலத்தில் நடைப்பயிற்சி வருவோரின் உடல் ஆரோக்கியம் கருதி சைக்கிளிங் செல்ல பூங்கா வளாகத்தில் இலவச சைக்கிள்களுடன் கூடிய சைக்கிள் டிராக் அமைப்பது நடையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 50 கோடி ரூபாயை கொட்டி பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி கண்மாயை துார்வாரி ஆழப்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாக நடையாளர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் பூங்காவில் 15 கடைகளை கட்டவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுமா என்பதில் சந்தேகம் இருப்பதாக நடையாளர்கள் குற்றம் சுமத்தினர். கண்மாயை ஆழப்படுத்தி பராமரிக்கப் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்காதது மற்றும் கண்மாய் ஆக்கிரமிப்பை கண்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் கண்மாய் சுருங்கி கொண்டே வந்தது. கண்மாயில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறை ஆண்டு தோறும் ஏலம் விடுவது வழக்கம். இதில் பல லட்சம் ரூபாய் ஊழல் அரங்கேறும். ஏலம் எடுக்கும் கான்ட்ராக்டர் தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்து கொள்ளை லாபம் ஈட்டுவார். இதனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் இன்றி வறண்டு சாக்கடைகள் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு கண்மாயை துார் வார வேண்டும். கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை மீண்டும் வளராத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என நடையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த திட்டத்தில் கண்மாய் கரையைப் பலப்படுத்துதல், படகு சவாரி, கண்மாய் மேற்கு, வடக்கு பகுதி கரையோரம் சைக்கிள் பாதை, நடை பயிற்சி பாதை, யோகா, தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள், முதியோர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப் பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 50 கோடி ரூபாய் அமையும் சுற்றுலாத்தலம் வெறும் பொழுதுப்போக்கு மையமாக இருக்காது. மக்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் பொழுதுப்போக்கிற்கு, சினிமா தியேட்டர்கள், கோயில்களை விட்டால் வேறு ஒன்றுமே இல்லை. நடைப்பயிற்சி செல்வோருக்கும் போதுமான நடைப்பயிற்சி பாதை இல்லாமல் சாலையோரம் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு 3 கி.மீ., தொலைவிற்கு நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை