உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரிமாவட்டம் பந்தலுாரில்பரபரப்பு |Nilgiris |Archive without permission Police rescued 15 people

நீலகிரிமாவட்டம் பந்தலுாரில்பரபரப்பு |Nilgiris |Archive without permission Police rescued 15 people

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வெற்றி என்ற இடத்தில் கடந்த 1999 ம் ஆண்டு லவ் ஷோர்என்ற பெயரில் அகஸ்டின் என்பவர் காப்பகம் ஒன்றை நிறுவினார். காலப்போக்கில் அதை மனநல காப்பகமாக மாற்றினார். ஆனால் காப்பகம் செயல்பட அரசு அனுமதி பெறவில்லை. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஊழியர்கள் தாக்கி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதார துறை கடந்த 2017 ம் ஆண்டு அகஸ்டினுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அகஸ்டின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கேரள மாநிலம் கோழிக்கோடு மனநல மருத்துவர் ஒருவரின் பரிந்துரையுடன் காப்பகத்தில் தங்கி உள்ள மனநல நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் மருந்துகள் வழங்கி வருகிறோம். மேலும் முறையான உணவு மற்றும் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி உள்ளதாகவும், தேவைப்படும் வசதிகளை விரைவில் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார். எனினும் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக காப்பகம் நடத்த அனுமதி பெறவில்லை. இதையடுத்து காப்பகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூடலுார் டிஆர்ஓவிற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. செந்தில்குமார் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் காப்பகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் நடுங்கும் குளிரில் விரிப்பு மற்றும் கம்பளி ஏதும் இன்றி படுக்க வைத்திருந்ததும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மூலமே அறைகளை சுத்தம் செய்து வருவதும், சுகாதாரமற்ற முறையில் கடும் துர்நாற்றம் வீசும் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆய்விற்கு பின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 13 மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் என மொத்தம் 15 பேரை அதிகாரிகள் மீட்டு கோவையில் செயல்படும் மனநல மருத்துவ காப்பகத்தில் சேர்த்தனர். மன நல காப்பகம் சீல் வைக்கப்பட்டது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை