தலா 100 கிலோ கொண்ட 1,807 மூட்டை பருத்தி விற்பனை | Cotton market | ₹ 48 Lakh sales | Athur | selam
சேலம் மாவட்டம் ஆத்துார் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 316 விவசாயிகள் தலா 100 கிலோ எடை கொண்ட 1,807 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்துார், திருப்பூர், திருச்சி, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 16 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். பி.டி.ரகம் 100 கிலோ கொண்ட குவிண்டால் 7,089 முதல் 7,899 ரூபாய், டி.சி.ஹெச். ரகம் குவிண்டால் 9,159 முதல் 10 ஆயிரத்து, 869 ரூபாய், கழிவு பருத்தி குவிண்டால் 3,589 முதல் 6,168 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 1,807 மூட்டை பருத்தி 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.