உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / பெரியநாயகி மகளிர் அணி அசத்தல் வெற்றி | District Tennis Tournament|

பெரியநாயகி மகளிர் அணி அசத்தல் வெற்றி | District Tennis Tournament|

பெரியநாயகி மகளிர் அணி அசத்தல் வெற்றி | District Tennis Tournament| பள்ளி கல்வித்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் மாணவிகள் பிரிவு போட்டியில் கோவிலூர் பெரியநாயகி மகளிர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு , மாவட்ட விளையாட்டு இணைச்செயலாளர் கலைவாணன் தலைமையில் சான்றிதழ், மெடல் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது அனைத்து பிரிவிலும் முதலிடம் பெற்ற அணியினர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை