உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மற்றும் கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி | Amaravati dam open | Farmers happy | Udumalpet

திருப்பூர் மற்றும் கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி | Amaravati dam open | Farmers happy | Udumalpet

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 90 அடி நீர் மட்டம் கொண்ட அணை தற்போது 88.19 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,053 கன அடியாக உள்ளது. பாசன வசதிக்காக ஷட்டர் வழியாக வினாடிக்கு 3,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணை நீர் திறப்பால் திருப்பூர் மற்றும் கரூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை