வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி| District Boxing Tournament| covai
வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி| District Boxing Tournament| covai திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . 14,17,19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது போட்டியில் 64 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளியின் முதல்வர் சின்னையா போட்டியை துவக்கி வைத்தனர். கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், இளங்கோவன் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தது. வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.