உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தங்க குடத்தை ஊர்வலமாக சுமந்து வந்த ஆண்டாள்

தங்க குடத்தை ஊர்வலமாக சுமந்து வந்த ஆண்டாள்

தங்க குடத்தை ஊர்வலமாக சுமந்து வந்த ஆண்டாள் / Trichy / Srirangam Renganayagi Temple / Ani Thirumanjanam Vaibhavam ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 8ம் தேதி ரெங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்திற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது, தங்கக்குடத்தில் நிரப்பப்பட்ட புனிதநீரை கோயில் யானை ஆண்டாளும், வெள்ளிக் குடங்களில் நிரப்பபட்ட புனிதநீரை கோயில் பட்டாச்சாரியார்களால் கொண்டு வந்தனர். மேளதாளங்கள் முழங்க அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தாயாருக்கு திருமஞ்சனம் முடிந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறும். தாயார் ஜேஷ்டாபிஷேகம் வைபத்தின் காரணமாக இன்றும் நாளை பிற்பகல் 3 மணி வரை தாயாரை பக்தர்கள் சேவிக்கமுடியாது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் புனிதநீரை வணங்கி வரவேற்றனர். கோயில் இணை கமிஷனர் சிவராம்குமார், பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை