உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / கொந்தளித்த மக்கள் சரமாரி கேள்வி| Wildlife| Forest department| Animal rescue fails | Vellore

கொந்தளித்த மக்கள் சரமாரி கேள்வி| Wildlife| Forest department| Animal rescue fails | Vellore

காட்டுக்கு நடுவில் எலும்பு குவியல் ???? நடுக்காட்டில் மலை போல் கிடந்த எலும்பு குவியல் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் காட்சி ஃபாரஸ்ட் ஆபீசர்ஸ் அலட்சியமா? வேலூர் வீரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதில ஏகப்பட்ட காட்டு விலங்குக சுத்தி திரியுது. நேத்து அந்த பக்கமா ரோந்து போன வனத்துறையினர் ஒரு படு பயங்கர காட்சிய பாத்து ஷாக் ஆனாங்க. நிறைய ராட்சச சைஸ் எலும்பு துண்டுங்க மலை மாதிரி குவிஞ்சு கிடந்துச்சு. உடனே பேரணாம்பட்டு வனச்சரகர் ரகுபதி தலைமையில ஃபாரஸ்ட் ஆபீஸர்ஸ் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. வெட்டினரி டாக்டர் ஜெயச்சந்திரன் எலும்பு துண்டுகளை கவனமா பரிசோதிச்சாரு. இது எல்லாம் சுமார் ஒரு 7 வயசு மதிக்கத்தக்க பெண் யானையோட எலும்புங்னு உறுதியாச்சு. யானை தவறி கீழ விழுந்து இறந்திருக்கலாம்னு டாக்டர்கள் சந்தேகிக்கிறாங்க அடிக்கடி காப்பு காட்டு பகுதியில மர்ம நபர்கள் வேட்டையாடுறது தொடர்கதையா நடக்குது. யானையோட இறப்புல சந்தேகம் இருக்கிறதா சமூக ஆர்வலர்கள் குற்றம் சொல்றாங்க. இதனால ஃபாரஸ்ட் ஆபீஸர்ஸ் யானையோட எலும்புகளை பத்திரமா சேகரிச்சு வச்சிருக்காங்க. ஒரு யான தவறி விழுந்துருந்தாலும், அது இப்படி எலும்பு கூடா ஆகுற வரைக்கும் எப்படி ஃபாரஸ்ட் ஆபிஸர்ஸ் கவனிக்காம விட்டாங்க? அப்போ முறையா டைமுக்கு ரோந்து போறது இல்லையான்னு மக்கள் சரமாரியா கேள்வி கேக்குறாங்க. இப்போ அலர்ட்டான ஆபீஸர்ஸ் தீவிரமா விசாரணை நடத்துறாங்க.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை