தனிப்படை விசாரணையில் மரணம்: டிஜிபி திடீர் உத்தரவு | Ajithkumar case | DGP order | SIT disbandment |
சிவகங்கை திருப்புவனத்தில் நகை காணாமல் போன விவகாரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இருந்தபோது மரணம் அடைந்தது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்துசென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீசார் 2 நாட்களாக அஜித்குமாரை பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாகவும், தனிப்படையினருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் ஐகோர்ட் மதுரை கேள்வி எழுப்பி இருந்தது.