சிலைகளை விற்க திட்டம்: தம்பதி உட்பட 4 பேர் சிக்கினர்
சென்னை அடையாறு, சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பிரகாஷ் - சுமதி தம்பதி வீட்டில் நடந்த சோதனையில் நாகாத்தம்மன் உலோக சிலையும், உலோக உடைவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. சென்னை முகப்பேரை சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ், சேலம் கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இந்த சிலை, வாளை கோயிலில் இருந்து திருடி தம்பதியிடம் கொடுத்துள்ளனர். இவற்றை விற்றால் கோடிக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் என கூறியதால் சிலையை தம்பதி பதுக்கி வைத்திருந்தனர்.
ஜூலை 21, 2024