உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளழகர் தீர்த்தவாரியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் | Chithirai festival | Kallazhagar temple

கள்ளழகர் தீர்த்தவாரியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் | Chithirai festival | Kallazhagar temple

கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த பக்தர்கள் கோலாகலமாக நடந்த தீர்த்தவாரி மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று கோலாகலமாக நடந்தது. மண்டூக முனிவருக்கு சாப விமோட்சனம் அளிக்க மதுரை நோக்கி வந்த கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். பின்னர் ஆழ்வார்புரம், வைகை வடகரை பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். தொடர்ந்து கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தது. ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரம் உற்சாகமாகத்துடன் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி வண்டியூர் பகுதிகளல் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழந்தருளினார்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை