/ தினமலர் டிவி
/ பொது
/ துப்பாக்கிச்சூடுக்கு பிறகு முதல்முறையாக கூட்டத்தில் பேச்சு | Donald Trump | US president elecion
துப்பாக்கிச்சூடுக்கு பிறகு முதல்முறையாக கூட்டத்தில் பேச்சு | Donald Trump | US president elecion
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ட்ரம்ப் பேசியபோது, அவரை மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டான். குண்டு காதில் உரசியபடி சென்றது. ட்ரம்ப் மயிரிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு முதல்முறையாக மில்வாக்கி Milwaukee நகரில் நடந்த குடியரசு கட்சி மாநாட்டில் ட்ரம்ப் பேசினார். அவரது வலது காதில் கட்டு போடப்பட்டிருந்தது.
ஜூலை 19, 2024