உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு

ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 19ம் தேதி, சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவுக்கு சென்றார். அவரது கட்சியினர் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள், முண்டியடித்து ஜெகனை நெருங்க முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது, ஜெகனை பார்க்க சென்ற இருந்த 62 வயதான சிங்கையா என்பவர் வாகனம் மோதி இறந்து கிடந்தார். ஜெகன்மோகனின் கான்வாயில் வந்த ஏதோ ஒரு வாகனத்தில் சிக்கிதான் அவர் இறந்து இருக்க கூடும் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ