ஏர்போர்ட் காவலுக்கு வந்தாச்சு யாழினி | Chennai Airport | Airport sniffer dog | Sniffing Dog Caesar
ஏர்போர்ட் காவலுக்கு வந்தாச்சு யாழினி | Chennai Airport | Airport sniffer dog | Sniffing Dog Caesar ஏர்போர்ட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சென்னை ஏர்போர்ட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 9 மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சீனியர் மற்றும் வேலையில் செம கெட்டி நம்ம சீசர் தான். லாப்ரடார் வகையை சேர்ந்த சீசர் 2016ல் வாங்கப்பட்டு ஒரு வருடம் காசியாபாத் பயிற்சி மையத்தில் டிரைனிங் எடுத்தது. அதன் பின் சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பணிக்கு சேர்க்கப்பட்டது. ஆரம்பம் முதலே ரொம்ப ஆக்டிவ், ஸ்மார்ட் என பேரெடுத்து பல அலுவலர்களிடம் பாராட்டுகளை பெற்றது. ஏர்போர்ட் வளாகத்தில் அடையாளம் தெரியாத பொருட்கள், சந்தேகத்துக்குரிய நபர்களை துப்பறியும் பணியில் எப்போதும் நம்ம சீசர் பங்கு இருக்கும். இப்படி 8 வருடம் 6 மாதங்கள் வரை தனது பணியை செவ்வனே முடித்து இன்று ஓய்வு பெற்றது சீசர். சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் சீசருக்கு ரிட்டயர்மென்ட் பார்ட்டி நடந்தது. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர். பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சீசரின் இடத்தை நிரப்ப மோப்ப நாய் யாழினி சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது. மறைத்து வைத்த வெடிபொருளை யாழினி கண்டுபிடித்து அசத்தியது. Breath யாழினி லாப்ரடார் ரெட்ரீவர் வகையை சேர்ந்தது. ஒன்பது மாத வயதான யாழினிக்கு ராஞ்சியில் உள்ள பயிற்சி முகாமில் ஆறு மாதம் டிரைனிங் கொடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து யாழினி மற்றும் சீசருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். மலர்கள் தூவி ஜீப்பில் அழைத்து சென்று அதிகாரிகள் சீசரை வழியனுப்பி வைத்தனர்.