/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கிளை சிறைகள் விவகாரத்தில் அண்ணாமலை எதிர்ப்பு | Annamalai | BJP state president | DMK
கிளை சிறைகள் விவகாரத்தில் அண்ணாமலை எதிர்ப்பு | Annamalai | BJP state president | DMK
18 கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது. தமிழகத்தில் குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஜூலை 29, 2024