/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செந்தில் பாலாஜி திடீர் அறிக்கையின் பின்னணி Arrest warrant Adani | Adani Stalin meet | Senthil Balaji
செந்தில் பாலாஜி திடீர் அறிக்கையின் பின்னணி Arrest warrant Adani | Adani Stalin meet | Senthil Balaji
இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. தனது நிறுவனம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைக்க இவர் சில மாநில அரசியல் புள்ளிகளுக்கு 1925 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் இந்திய அரசியல் களத்தில் கடுமையாக எதிரொலித்துள்ளது. அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பார்லிமென்டில் எதிர்கட்சிகள் அமளி செய்து வருகின்றன. இதே விவகாரம் தமிழக அரசியலிலும் புயலை கிளப்பி வருகிறது. காரணம், அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா சொல்லும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்தின் பெயரும் இருந்தது.
டிச 06, 2024