அமெரிக்கா, பிரிட்டனுக்கு புடின் மிரட்டல் Russia vs Ukraine | ATACMS vs RS-26 Rubezh | Putin vs Biden
இதே அடி தான் உங்களுக்கும் US, UK-வை கட்டம் கட்டிய புடின்! அடுத்து என்ன நடக்கும்? ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கி1000 நாட்களை தாண்டி விட்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வாரமாக தீவிர சண்டை நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் குர்ஸ்க் என்ற இடம் தான். ரஷ்யா, உக்ரைன் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தின் ஒரு பகுதியை ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. இதனால் ரஷ்யா கடும் அதிர்ச்சி அடைந்தது. இழந்த பகுதியை மீட்க சண்டையை தீவிரமாக்கியது. குர்ஸ்க் பகுதியில் 50 ஆயிரம் வீரர்களை குவித்தது. இதில் 12 ஆயிரம் பேர் வடகொரியா அனுப்பி வைத்த வீரர்கள். உக்ரைன் முழுதும் உள்ள மின் உற்பத்தி மையங்கள், ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாறுமாறாக ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி பந்தாடியது ரஷ்யா. பதிலுக்கு உக்ரைனும் 100க்கும் அதிகமான ட்ரோன்களை ரஷ்யாவுக்குள் ஏவி குண்டு மழை பொழிந்தது. மாஸ்கோ வரை உக்ரைன் ட்ரோன்கள் புகுந்தன. இதனால் தாக்குதல் வேகத்தை இன்னும் அதிகரித்தது ரஷ்யா. இதை உக்ரைனால் சமாளிக்க முடியவில்லை. வடகொரியாவும் போரில் குதித்ததால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தங்களுக்கு சப்ளை செய்த சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் அனுமதி கோரியது. முதல் ஆளாக அமெரிக்க அதிபர் பைடன் பச்சைக்கொடி காட்டினார்.