3 ஜீயர்களை அழைத்து உதயநிதி பரிகாரம்? | Udhayanidhi | Srirangam Rangarajan | Thirumavalavan
சில தினங்களுக்கு முன் விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதை செய்துள்ளார். நீங்கள், இரண்டு சீட்டுக்கு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கைகட்டி, வாய் பொத்தி இருந்து விட்டு, அரசியலுக்காக சனாதனத்தை இழுப்பது கேவலமாக இல்லையா. உங்கள் கட்சி அழுத்தத்திற்கு ஆளாகி சனாதனத்தை குடைய பார்த்தால், உதயநிதிக்கு கோபம் வந்து அடுத்த தேர்தலில் ஒரு சீட் தான் என சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள். யோசித்து எழுத வேண்டும் என அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.