உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மைக்கில் கெஞ்சிய பிரமுகர்: அரசியல் விழாவான அரசு விழா | Ungaludan Stalin Camp | Tiruppur

மைக்கில் கெஞ்சிய பிரமுகர்: அரசியல் விழாவான அரசு விழா | Ungaludan Stalin Camp | Tiruppur

யாராவது எடுத்திருந்தா கொடுத்திருங்க உங்களுடன் ஸ்டாலின் முகாமில் திருட்டு திருப்பூர், புதூர் பிரிவு அருகே உள்ள மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. 44,45,50 ஆகிய மூன்று வார்டுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தது. முறையான வழிகாட்டுதல் இல்லாமல் முதியவர்கள், பெண்கள் சிரமப்பட்டனர். கூட்டத்தில் நடுவில் நின்று ஒருவர் டோக்கன் கொடுக்க, அவரை சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். டோக்கன் வழங்கியவரிடமிருந்து அதனை பிடுங்கியும், ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டும் அங்கே அடிதடி நடப்பது போன்ற சூழல் நிலவியது. breath ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்தும் பாதுகாப்பு தேவையான போலீசார் அழைக்கப்படவில்லை. இதனால் கூட்டம் கட்டுக்குள் அடங்காமல் இருந்தது. விண்ணப்பங்களை சரி பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளின் செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அரசியல் பிரமுகர் மைக்கை எடுத்து, யாராவது செல்போன் எடுத்திருந்த கொடுத்திருக்க என மக்களிடம் கேட்டுக்கொண்டார். முகாம் நடக்கும் மண்டபத்தில் தான் இப்படி என்றால், வெளியே ஆயிரக்கணக்கான டூவீலர்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு அப்பகுதி முழுக்க நெரிசல் மிகுந்து காணப்பட்டது. திமுக கட்சி கொடி, அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள் அங்கே அணிவகுத்து நின்றிருந்தன. அரசு சார்பில் நடத்தப்பட்ட முகாம், அரசியல் கட்சி விழா போல மாறியதால் மக்கள் வேதனையுடன் கிளம்பி சென்றனர்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி