/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய திமுக அமைப்பாளர் மகன்-பரபரப்பு | armstrong case | advocate malarkodi
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய திமுக அமைப்பாளர் மகன்-பரபரப்பு | armstrong case | advocate malarkodi
ஆம்ஸ்ட்ராங் கொலை துவக்கம் முதலே பல திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைதானவர்களிடம் காவலில் நடந்த விசாரணையில் பெண் ஒருவருக்கும் கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் சென்னையை சேர்ந்த வக்கீல் மலர்கொடி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வண்ணாரப்பேட்டை ஹரிகரன் என்பவரும் கைதானார். 2 பேரையும் செம்பியம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் வக்கீல் மலர்கொடிக்கு என்ன தொடர்பு என்பதை போலீசார் முழுமையாக வெளியிடவில்லை.
ஜூலை 17, 2024