அரிவாளுடன் விரட்டும் கும்பல்: தேனி அருகே பகீர் சம்பவம் | Theni | Theni Police
தேனி கைலாசபட்டியை சேர்ந்தவர் பெருமாள், வயது 45. தேனி-பெரியகுளம் ரோட்டில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இரவு கடை முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கே காரில் வந்தது. பட்டாகத்தி, அரிவாளுடன் கடையை நோக்கி ஓடி வந்தனர். இதனை கண்டு பதறிய பெருமாள் நண்பர்கள் சிதறி ஓடினர். இருந்தும் கூலிப்படை கும்பல் துரத்தி துரத்தி வெட்டியது. பெருமாள், அவரது உறவினருக்கு முதுகில் வெட்டு விழுந்தது. உயிருக்கு பயந்து ஓடியவர்களை கும்பல் துரத்தி சென்றது. இதனால் அந்த கிராமமே போர்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து மக்கள் ஒன்று கூடியதும் கூலிப்படையினர் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.