ப்ரியமுடன் கிராமம்: பூலோக சொர்க்கம்
ஜூன் - செப்டம்பரில் மேற்குதொடர்ச்சி மலை தரும் சாரல், அக்டோபர் - டிசம்பரில் 'ஜில்' என்ற பருவமழை, சூரியகாந்தி தோட்டங்கள், காற்றாலைகள், படித்துறையில் ததும்பும் குளத்து நீர்... ஆஹா... பூலோக சொர்க்கம்... தென்காசியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் இருக்கும் சுந்தரபாண்டியபுரம் கிராமம். இவ்வூரின் 1,700 ஏக்கர் விவசாயத்திற்கு 250 ஏக்கர் பரப்பளவு பெரிய குளமே ஆதாரம். குற்றால சீசனில் கிடைக்கும் உபரி நீரை குளத்தில் சேமித்து எட்டு மாதங்கள் வரை பயன்படுத்துகின்றனர். சூரியகாந்தி தோட்டங்களில் சுற்றுலாவாசிகள் புகைப்படம் எடுக்க தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வணக்கங்க... நான் அக்ரஹார தெருதிண்ணை வைத்த வீடுகள் என்னில் அதிகம். தை மாதம் பெருமாளுக்கும், சித்தரை மாதம் முப்பிடாதி அம்மனுக்குமான திருவிாவில் என் வழியே பயணிக்கும் தேர்வலம் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். தெப்பக்குளம் கல்மண்டபத்தில் அமர்ந்து எங்கள் ஊரில் அழகை ரசித்தால், அதுவும் தேர்வலத்திற்கு இணையாய் இனிக்கும்.எங்க ஊரு இளசுகள்'எங்க ஊர்ல இருக்குற பல்வேறு சமூக மக்களை உள்ளடக்கின 'கிராம கமிட்டி'யை 1966ல் உருவாக்கினோம். கமிட்டியில முடிவு பண்ணி, பெரியகுளத்து மீன்பிடிப்பை ஏலத்துக்கு விட்டு அந்த வருமானத்துல சுரண்டை, சாம்பவர் வடகரை கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைச்ச காலமும் உண்டு. இப்போ செயல்படாம இருக்குற அந்த கமிட்டிக்கு எங்க இளைய தலைமுறை உயிர் தரணும்னு ஆசைப்படுறோம்!' - ஊர் பெரியவர்கள்.'ஷூட்டிங் ஸ்பாட்' ஊரில் 'சினிமா மோகம்' எப்படி? படப்பிடிப்பு நடந்தா வேடிக்கை பார்ப்போம்... அதோட சரி.