உள்ளூர் செய்திகள்

ஏழரை கேள்விகள்

ஒழியாது ஒளிந்திருக்கும் 'லஞ்சம்' எனும் பெருச்சாளி 'இடைநில்லா பேருந்து' எனும் அறிவிப்பு பலகையிலும், 'வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது' எனும் செய்தியிலும் திருப்தியுறும் நாங்கள் தமிழர்கள்; 'தீப ஒளி'யாய் வரும் தீபாவளியே... பதில் சொல்... எங்களின் எந்த இருள் அகற்ற நீ வருகிறாய்? 1 முதிய நடிகரது உடல் அசையா உதட்டசைவை, 'சிறந்த நடிப்பு' என்று கொண்டாடும் மனங்களிடம், 'தள்ளாத வயதிலும் உடல் வருத்தி உழைத்து உண்ணும் உன் வீட்டு முதியோரை கொண்டாடு' என அறிவூட்ட வருகிறாயா? 2 'குற்றவாளிகள் தப்பினர்' - அய்யோ; 'தப்பியவர்கள் சிக்கினர்' - அருமை; இந்த 'அய்யோ... அருமைக்கு இடையில், தப்பிச் சென்றவர்கள் நிறைவேற்றிய பணிகள் என்ன' எனும் கேள்விக்கு விடை தரும் திரி கொளுத்த வருகிறாயா? 3 'விடாமுயற்சியுடன் பொறியியல் படித்து முடித்தேன்' என்ற நம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரது பேச்சில், 'படிப்பிற்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தம் இருக்காது' எனும் உண்மை ஒளிந்திருப்பதை 'விசில்' அடிக்கும் இளைஞர்களுக்கு புரிய வைக்க வருகிறாயா? 4 'முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கை, திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., செய்யும் சதி வேலை' எனும் செய்தி, 'அனுதாபம் உண்டாக்கும் சூழ்ச்சி' என்றுணர்ந்த மனங்களில், நீ இரண்டாவது விளக்கு ஏற்ற வருகிறாயா? 5 ' ஜெயிலர் 2 வசூல், நஸ் ரியாவின் உடை, அனிருத் திருமணம் பற்றி விரல்நுனியில் தகவல் வைத்திருக்கும் இளைஞனே... நம் பெருமைக்குரிய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை எப்படி இருக்கிறது' எனும் கேள்வி எழுப்ப வருகிறா யா? 6 'பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை என பல கோடி ரூபாய் கரைத்த பிறகும், 'எனது துறை சார்ந்த பிழையால் மக்களுக்கு பாதிப்பெனில் நானே பொறுப்பு' என எந்த அமைச்சரும் சொல்லாதது ஏன்' எனக் கேட்டு சிந்திக்க வைக்க வருகிறாயா? 7 'தமிழகத்தில் லஞ்சம் ஒழிந்துவிட்டது' என ஆட்சியாளர்கள் பேசும் பெருமை; 'தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் சிக்கும் பணம்' என சில ஊடகங்கள் சொல்லும் உண்மை; 'எதை நாங்கள் நம்புகிறோம்' என அறிந்து கொள்ள வருகிறாயா? 7 ½ ' கரப்பான் பூச்சிகள் ஜாக்கிரதை' என வெளிச்சம் தர வருகிறாயா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !