உள்ளூர் செய்திகள்

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு

ஒரு 'பகுத்தறிவு' பயணம்!உங்களுக்கு தெரியாததாண்ணே... 'ஹிந்தி மொழியை மூன்று மாதங்களுக்குள் கற்றுக் கொண்டு விடலாம்'னு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சொன்னப்போ...'மூன்று மாதங்களுக்கு மேல கத்துக்க அந்த மொழியில என்ன இருக்கு'ன்னு 'நறுக்'குன்னு கேட்டார் நம்ம அண்ணாதுரை!இப்போ சொல்லுங்கண்ணே... அண்ணாதுரை பேச்சுல தெறிச்சது ஆளுமையா... இல்ல, 'தமிழனை தவிர்த்து யாராலும் அழிக்க இயலாத தமிழை ஹிந்தி அழிச்சிரும்'னு புலம்புறது ஆளுமையா?சரியாத்தான் கேட்குறே!தன்னோட கூட்டங்கள்ல எல்லாம், 'நான் சொல்வது சரியென்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்'னு, ஈ.வெ.ரா., சொல்லிச் சொல்லி பகுத்தறிவை வளர்த்தாரேண்ணே! எல்லாம் சரிதாம்மா... ஆனா, பலன் இல்லையே; இப்போ, ரூபாய் குறியீட்டை தவிர்த்த 'தமிழக பட்ஜெட் அறிக்கை' பற்றி பெருமையா பேசின எத்தனை பேருக்கு, அந்த குறியீட்டை உருவாக்கின உதயகுமாரோட வார்த்தைகள் ஞாபகத்துல இருக்கும்னு நினைக்கிறே?எனக்கே ஞாபகம் இல்லையேண்ணே...என்னம்மா சொல்றே... ஜூலை, 2010ல் ரூபாய் குறியீடு தேர்வானதும், 'ஹிந்தி... தவிர்க்க வேண்டிய மொழியல்ல; ஹிந்தி அறிந்திருந்ததால் மட்டுமே எனக்கு இந்த வெளிச்சம் கிடைத்திருக்கிறது'ன்னு அந்த தம்பி சொன்னதை எப்படி மறந்தே?அட... ஆமாண்ணே... இப்போ ஞாபகம் வந்திருச்சு; அந்த தம்பி ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., தர்மலிங்கத்தோட பையன்தானே?ப்ப்பா... 'விடியல்' பயணம் பண்ற நீ வேற லெவல் தங்கச்சி; அப்படியே, நம்ம ரெண்டு பேரையும் ஒரு பையன் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்குறான்; அது எதுக்காகன்னு சொல்லு பார்ப்போம்!அவனைப் பார்த்தா, 'தமிழகத்துல லோக்சபா தொகுதிகள் குறைஞ்சிரும்'னு சொல்றதை நம்புற மூளைக்காரன் மாதிரி தெரியுது. என்ன பண்ணிடப் போறான்... மய்யமா ஒரு பாட்டு சேர்த்து 'ரீல்ஸ்' போடுவான்; என்ன பாட்டுன்னு நான் சொல்லணுமாண்ணே?வளையோசை கலகலகலவென...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !