உள்ளூர் செய்திகள்

முதல்வரே ஒரு நிமிஷம்...

செய்தி: மது குடிக்க மாமூல் தர மறுத்த மருந்தக உரிமையாளர் ரவுடிகளால் அடித்து கொலை!அநீதி: குடும்பத் தலைவரை இழந்து வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் குடும்பம்! 'சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது' என்று பெருமை பேசும் அரசே... இந்த மணிமேகலைக்கு நீதி தருவாயா?பெரம்பலுார், லாடபுரத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த என் கணவர் நாகராஜிடம், மே 3, 2022ல் மது குடிக்க பணம் கேட்டு ரூ.150 பறித்த ரவுடிகள், இரவு மீண்டும் வந்து பணம் கேட்டு தாக்கியதில் அவர் இறந்து விட்டார். பலர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த கொடூர கொலையை கண்டித்து, 'தமிழகத்தில் மாமூல் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டது நினைவில் இருக்கிறதா?எதற்கும் அசைந்து கொடுக்காத அரசே... வருமான ஆதாரமின்றி தவிக்கும் எனக்கு அரசு வேலையும், நிவாரண உதவியும் கேட்டு, மே 12, 2022ல் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேனே... நேரிலும் மனு கொடுத்தேனே... எதற்குமே நடவடிக்கை கிடையாதா?பெரம்பலுார் காவல் நிலையத்தில் பதிவான எப்.ஐ.ஆர்., எண்: 328/2022 அடிப்படையில் இருமுறை பெரம்பலுார் நீதிமன்றம் சென்றுவந்த பின், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வங்கி கணக்கில் வரவானது; 'திராவிட மாடல்' ஆட்சியில் ஒரு உயிரின் விலை 25 ஆயிரம் ரூபாய் மட்டும்தானா?சட்டம் - ஒழுங்கு சீர்குலைவில் தலை வனை இழந்து நிற்கும் என் குடும்பத்திற்கு நீதி கிடையாதா அரசே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !