உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்

செய்தி: பிரம்பால் ஆசிரியை தாக்கியதில் இடதுகண் பார்வை பாதித்த மாணவர்! அநீதி: மகனது பார்வைத்திறன் சேதத் திற்கு இழப்பீடு கோரி 11 ஆண்டுகளாகப் போராடும் தந்தை! நான் விவசாயி மாரியப்பன். எனது மகன் மகிஷ் திருநெல்வேலி, சாம்பவர் வடகரை அரசுப்பள்ளியில் 2014ம் ஆண்டு ஆறாம் வகுப்பு படித்தபோது நிகழ்ந்த சம்பவம் இது! ஆகஸ்ட் 22, 2014 அன்று கணித ஆசிரியை பயன்படுத்திய பிரம்பு எனது மகனது இடது கண்ணை பதம் பார்த்துவிட்டது! மருத்துவ செலவை ஏற்பதாக தலைமை ஆசிரியர் உத்தரவாதம் தந்து வேண்டு கோள் வைத்ததால், காவல் துறையில் நான் புகார் அளிக்கவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு எப்.ஐ.ஆர்., அவசியம் என்றதால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்து 2017ல் அதனைப் பெற்றேன். வாக்கு கொடுத்தது போல் பள்ளி தரப் பில் உதவவில்லை. இழப்பீடு கேட்டு 2017ல் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நான் அணுக, இந்த ஜனவரி, 2025ல் எனது W.P.(MD) NO.3924/2017 எண் கொண்ட வழக்கில், 'இழப்பீடு தொடர்பாக தென்காசி சிவில் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம்' என்று தீர்ப்பு வந்திருக்கிறது. அரசே... பள்ளி நிர்வாகத்தின் வார்த்தை களை நம்பி ஏமாந்து நிற்கும் எனக்கான நீதியை உம்மால் தர இயலாதா; இன்னும் நான் நீதிமன்றத்தின் படியேறத்தான் வேண்டுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !