உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்

சொக்க வைக்கும் ரிஷபாந்திகரும் தேவியும்! விழுப்புரம், திருவெண்ணைநல்லுார் அருகே ஏ மப்பூரில் பாலகுஜாம்பாள் உடனுறை வேத புரீஸ்வரர் ஆலயத்தினுள் இருக்கிறது இடைக் கால சோழர் ஆட்சிக் காலத்தைய இச்சிற்பம். திருநாவுக்கரசரின் தேவாரப்பாடலில், 'ஏமப் பேறுார்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது ஏமப்பூர்! 'அசுரர்களின் முப்புரங்களையும் அழிக் கையில், அச்சு முறிந்த தேரிலிருந்து சிவ பெருமான் வீழ்ந்திடாமல் அறத்தின் வடி வாகிய காளையாய் அவரைத் தாங்கினார் திருமால். அதற்குப்பின், நாயன்மார்கள் வழிபட தேவியுடன் அழகுற இப்படி காட்சி தருகிறார்' என்கிறது புராணம். தேவியின் முகத்தில் பூத்து நிற்கும் நாணம்; இதழ்களில் வழிந்தோடும் புன்னகை; தேவியை அணைத்தபடியும், ரிஷபத்தின் தலைமீது கை வைத்தபடியும் நிற்கும் ரிஷ பாந்திகரின் முகத்தில் ததும்பும் கருணை... உளி கொண்டு இவ்வுணர்வுகளுக்கு உயிர் ஊட்டப்பட்டிருக்கிறது. 'சிவன் தன் தலையில் சூடியிருப்பது கிரீட மல்ல... ஜடா மகுடம்; அவர் காதில் அணிந் திருப்பது எளிய மக்கள் அணியும் சுடுமண் காதணி; தேவி அணிந்திருக்கும் 'சன்ன வீரம்' எனும் முத்துமாலையை ஒத்த அணி கலனானது வீரம், வெற்றியோடு தொடர் புடையது' என்று 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இச்சிற்பத்தின் கலைநுட்பம் சொல்கிறார் தொல்லியல் மற்றும் கல்வெட் டியல் ஆய்வாளரான சி.வீரராகவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !