தி கேர்ள்பிரண்ட்
'விசாலமான அனுபவங்கள் இல்லாத, தன் மீதான பிறரின் ஆதிக்கத்தை வரையறுக்கத் தெரியாத பூமாதேவிதான் நமக்கேற்ற ஜோடி' என்பதை உணர்ந்து, அவளை தன் மீது காதல் கொள்ள வைக்கிறான் விக்ரம். 'அவனுடனான காதல் நம் எதிர்காலத்திற்கு நல்லதல்ல' என்பதை உணரும் பூமா, காதலில் 'ரிவர்ஸ் கியர்' போடுவதால் எதிர்கொள்ளும் சவால்களே கதை! 'நீங்கள் ஏன் ஆங்கில இலக்கியம் படிக்கிறீர்கள்' என பேராசிரியர் கேட்க, 'வேறு துறையில் இடம் இல்லை' என்கிறாள் ஒரு மாணவி. 'எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் படைப்புகள் பிடிப்பதால்' என்கிறாள் மற்றொருத்தி. 'சிறார் எழுத்தாளர் ஆவதற்கு' என்கிறாள் பூமா. சராசரி குடும்பத்து இளம் பெண்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில், தனக்கென ஒரு நோக்கம் உள்ளவளாகவும், நிறைய பலவீனங்கள் உள்ளவளாகவும் பூமாதேவியை வடித்தவிதம் நன்றாக இருக்கிறது. சினிமா வில்லனாக அல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் நிஜ 'பாய் பிரண்ட்'களின் நகலாக விக்ரம்... சிறப்பு! காதல் உறவு பற்றிய புரிதலுள்ள பெண்களைக் காட்டிலும் அது சார்ந்து கற்பனைகள் உள்ள பெண்களிடமே இக்கதை உரையாடுகிறது. தவறான காதல் உறவில் பெண்கள் எதிர் கொள்ளும் மன அழுத்தம் பற்றியும், அதிலிருந்து வெளியேற முயற்சிக்கையில் ஆண்கள் தரும் 'எமோஷனல் பிளாக் மெயில்' பற்றியும் தெளிவுடன் பேசுகிறது திரைக்கதை! 'என்னில் நீ எத்தனை சதவீதம்' என்று இளைஞர்களை சுயமதிப்பீடு செய்ய வைக்கிறான் விக்ரம். தன்னை அறிந்தபின் மனதில் ஊற்றெடுக்கும் தைரியத்தின் ஒரு துளி மூலம் இளம்பெண்களுக்கு ஊட்டம் தருகிறாள் பூமாதேவி. 'தவறான காதல் உறவில் பாதிக்கப்படுவது பெண்களே' எனும் கண்ணோட்டத்தை மட்டும் இயக்குனர் ராகுல் ரவீ ந்திரன் தவிர்த்திருக்கலாம். @block_B@ முக்காலத்திற்கும் பொருந்தும் இக்கதைக்கு இரண்டு வார கால தாமதமான விமர்சனம் பெருமையே!@@block_B@@@block_B@ 'பாய் பிரண்ட்'களுக்கான அக்னி பரிட்சை!@@block_B@@