திருக்குறள்: குறள் சொல்லும் குரல்
'என்னை நான் மதிக்கிற அளவுக்கு வாழணும்னு ஆசைப்படுறேன்!' யார் குரல்? : குபேந்திரன் வயது : 52 அடையாளம் : 'பசுமை ஆட்டோ' ஓட்டுநர் சென்னையைச் சுற்றி வரும் இவரது ஆட்டோ... தண்ணீர் பீப்பாய், புத்தகங்கள், இயற்கை மற்றும் செயற்கை செடிகளால் நிறைந்திருக்கிறது; 'மரம் வளர்ப்பு, உடல் உறுப்பு தானம், நுால் வாசிப்பு' பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறது! கவர்னருடன் அந்நாள் இந்த 2025 சுதந்திர தினத்துல ஆட்சியர் கையால விருது கிடைச்சது. ஜனவரி 26, 2024ல் கவர்னர் மாளிகையில, 'சமூக சேவை'க்கு சிறப்பு விருதும், இரண்டு லட்சம் ரூபாய் பரிசும் கிடைச்சது. சிங்கம் மாதிரி நெஞ்சு நிமிர்த்தி நின்ன நம்ம கவர்னர், 'சேவையை தொடருங் கள்'னு பாராட்டினார் பாருங்க... நிறைஞ்சுட்டேன்! சின்ன வருமானத்துல எப்படி இதெல்லாம்? 'எனது ஆட்டோ பயணம் ரசித்து நீங்கள் அளிக்கும் பணம் மூலம் உங்களது பெரிய மனம் பற்றி அறிந்து கொள்வேன்'னு ஆட்டோவுக் குள்ளே அறிவிப்பு வைச்சிருக்கேன்; பக்கத்து லேயே ஒரு உண்டியல்; கிடைக்கிறதுல எனக் கான ஊதியம் போக மத்தது உண்டியலுக்கு; தினமும் என் பங்கு, 10 ரூபாய்; இது எல்லாத் தையும், 'முதியோர், மாற்றுத்திறனாளிகள்' இல்லங்களுக்கு கொடுத்திருவேன்; மற்றபடி, இந்த செலவெல்லாம் என் சம்பாத்தியத்துல தான்! சென்னை கொட்டிவாக்கத்தின் குறுகலான சந்தின் இரண்டாவது மாடியில், 'கூடு' போன்ற ஒரு வீட்டில் இவரது குடும்பம்; ஆட்டோ நிறுத்தக்கூட வாசலில் இடமில்லை. 'ஆட்டோ நுாலகம்' - பயணிகள் இதை பயன் படுத்துறாங்களா? 'ஸ்மார்ட்போன்'லேயே தலைகுனிஞ்சு கிடக்குற என் மக்களை தலைநிமிர வைக்க முயற்சி எடுத்திருக்கேன்; ஒருசிலர் வாசிக் கிறாங்க. சீமான் சார், அண்ணாமலை சார், கமல் சார் எல்லாரும் இதைப் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினாங்க. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு சார், ஒரு 'மணி பிளான்ட்'டை எனக்கு பரிசா கொடுத்தார். இந்தா... அதை பொக்கிஷமா வைச்சிருக்கேன்! வேலுார், ஆரணிக்காரரான குபேந்திரன் கடந்த 29 ஆண்டுகால உழைப்பில் ஒரு ஆட்டோ வையும், எண்ணற்ற இதயங்களின் அன்பை யுமே சென்னையில் சம்பாதித்திருக்கிறார். மனைவி, மகனோடு உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்திருக்கிறார். குடும்ப விசேஷ நாட்களில் பயணியருக்கு மரக்கன்றுகள் பரிசளிக்கிறார். கவர்னர் தந்த பரிசுத்தொகையில் இவர் வாங்கிய தங்க காதணியே... மனை விக்கு இவர் கொடுத்த முதல் தங்கம். குறள் எண்: 33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். பொருள்: செய்யக்கூடிய வகையால் எக்காரணத்தாலும் விடாமல், செல்லும் இடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.97100 52971