பிளாக், பிரவுன், ஒயிட் கலர்ஸ்ல குட்டியா, அழகா, புஸூ புஸூ ஹேருடன் இருக்கும் கினிபிக்ஸ் (கினிப்பன்றி) வெரைட்டி தான், குட்டீஸ்களின் பேவரட் பெட் லிஸ்ட்டில் இருக்கு. பார்க்க முயல் மாதிரியே இருக்குற இந்த கினிபிக்ஸ் பத்தி ஆர்வமாய் பகிர்ந்தார், கோவில்பாளையத்தை சேர்ந்த, 'எஸ்.எம்., பெட் ஜோன்' உரிமையாளர் மதுமிதா.நம்மோடு பகிர்ந்தவை: ''அபிசினியன், பெருவியன், சில்கின்னு, 25க்கும் மேல வெரைட்டி கினி பிக்ஸ், செல்லப்பிராணியா வளக்குறாங்க. சின்ன இடத்துலயும், துறுதுறுன்னு ஓடிட்டே இருக்கும். ஆனா தாவுறது, சுவர்ல ஏறுறதுன்னு, எந்த சேட்டையும் பண்ணாது. காய்கறி, கீரை, பச்சைப்புல் விரும்பி சாப்பிடும். இதுக்கு கமர்ஷியல் புட் கடைகளில கிடைக்குது. சாப்பாடும், வாட்டரும் பக்கத்துல வச்சுட்டா சமத்துக்குட்டியா இருந்துக்கும். ஆக்டிவ்வா இருக்கறதாலயே குட்டிஸ்களோட பேவரட் பெட்டா மாறிடுச்சு. ஓனர்கிட்டயும் ஈஸியா அட்டாச் ஆகிடும்.வேலைக்கு போறவங்க, அப்பார்ட்மெண்ட், குவாட்ரஸ் மாதிரியான சூழல்ல இருக்கறவங்களுக்கு, கினிபிக்ஸ் வளக்குறது நல்ல சாய்ஸ். இதுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இதோட ஒரு ஜோடி விலை, 3,500 ரூபாய் தான்'' என்றார்.