| ADDED : ஆக 10, 2024 11:03 AM
என் பூனை ஒழுங்காக சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. இதை சரிசெய்ய என்ன செய்வது?- எஸ்.கோமதி, கோவை.நாய்கள் கூட உரிமையாளர் இல்லாத போது, 'எமோஷனல்' காரணங்களுக்காக, சாப்பிடாமல் அடம்பிடிக்கும். ஆனால் பூனை சாப்பிடாமல் இருக்காது. அப்படி பட்டினி கிடந்தால், உடல்நிலை, தட்ப வெப்ப சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும். ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம்.மழைக்காலங்களில், சில வைரஸ் தொற்றுகளால், பூனைக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு, மூச்சுவிடுவதில் சிரமம், கண்களில் இருந்து ஒருவித திரவம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். முறையாக தடுப்பூசி போடும்பட்சத்தில், இப்பாதிப்புகளின் வீரியம் குறைவாக இருப்பதோடு, விரைவில் குணப்படுத்திவிடலாம். உடல் எடை குறைவாக இருந்தாலும், பூனைகளுக்கு முறையாக தடுப்பூசி போடுவது அவசியம். பூனையின் வளர்ச்சிக்கு, 'டாரின்' என்ற அமினோ ஆசிட் உதவும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், 'டிராப்ஸ்' கொடுக்கலாம். பிறந்து நான்கு மாதங்கள் வரை, பூனையின் உணவு, பராமரிப்பில் கவனம் செலுத்தினால், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யலாம்.- ஆர். சக்ரவர்த்தி, கால்நடை மருத்துவர், கோவை.