உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்: பூனை யாருக்கு அலர்ஜி?

டாக்டர்ஸ் கார்னர்: பூனை யாருக்கு அலர்ஜி?

பூனைக்கு ஆரம்பகால பராமரிப்பு அவசியமா? புதிதாக வளர்க்க துவங்குவோர் எவற்றில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?எஸ். ஐஸ்வர்யா, கோவை.பூனை தனது உடல் எடையில், 40 சதவீத எடையிலான உணவு மட்டுமே ஒரு நாளைக்கு சாப்பிடும். ஒரு கிலோ அதன் எடையாக இருந்தால், 40 கிராம் உணவு தான் தினசரி சாப்பிட கொடுக்க வேண்டும். அசைவ உணவு அதிகம் கொடுப்பதன் மூலம் புரோட்டீன் சத்து கிடைக்கும்.பூனைகளுக்கு முறையாக குடல்புழு நீக்கம் செய்வது, தடுப்பூசி போடுவது அவசியம். பிறந்து 45 நாட்களுக்கு பின் வைரஸ் தொற்றுக்கிருமி பரவாமல் தடுக்க, முதல் தடுப்பூசி போடப்படும். பின் 21 நாட்கள் கழித்து, பூஸ்டர் தடுப்பூசியும், 21 நாட்கள் இடைவெளியில் ரேபிஸ் தடுப்பூசியும் கட்டாயம் போட வேண்டும். நாய்கள் மட்டுமல்லாமல், பூனைகளுக்கும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.வீட்டிற்குள் குறிப்பிட்ட இடத்தில் மணல் கொட்டி, அதன் மீது, சிறுநீர் கழிக்க, பூனைகளை சிலர் பழக்கப்படுத்துகின்றனர். ஈரமான மணலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் அடிவயிறு பகுதியில், கருப்பாக பூஞ்சை தொற்று படர வாய்ப்புள்ளது. இதற்கு உடனே மருத்துவ சிகிச்சை எடுப்பது அவசியம். 'கேட் லிட்டர்' கடைகளில் கிடைப்பதால் அதிலும் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். பூனை காதுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தவிர, பூனைகளுக்கு உடல் முழுக்க முடி இருப்பதால் தினசரி இருமுறை சீவிவிட்டு, கொட்டும் முடிகளை அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை, முதியோர், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவோருக்கு, இம்முடிகளால், சுவாச குழாய்களில் அழற்சி ஏற்படலாம்.-டி. யுகன்யா, கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ