மனிதர்களை போல தான் விலங்குகளும். ஒவ்வொரு ரக நாய்களுக்கும், வெவ்வேறு குணாதிசயம் இருக்கும். இதை, வீட்டிலுள்ளோர் அறிந்து கொள்ளவும், அதோடு நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவும், 'டிரெயினிங் கோர்ஸ்' கைக்கொடுக்கும் என்கிறார், இத்துறையில், 31 ஆண்டுகள் அனுபவம் கொண்ட, கோவையை சேர்ந்த பயிற்சியாளர் சக்திவேல்.'டாக் டிரெயினிங்' கேள்விப்பட்டிருக்கோம். அதென்ன 'கோர்ஸ்'?சக்திவேல் கூறியதாவது: '' பேஸிக், அட்வான்ஸ், பிரீமியம் என, மூன்று விதமான 'கோர்ஸ்'கள் உள்ளன. ஒவொரு பப்பிக்கும், பயிற்சி முறை, பயிற்சிக் காலம் மாறுபடும். பிறந்து மூன்று மாதமான பிறகே பப்பிகளால் நாம் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். பேஸிக் கோர்ஸ், 3-5 மாதங்கள் ஆன பப்பிகளுக்கு, மூன்று மாத காலம் வரை கொடுக்கப்படும்.பேஸிக் கோர்ஸில், 10 வார்த்தைகள் வரை கீழ்படிய கற்று தருவோம். ' சிட்', 'ஸ்டாண்ட்', 'ரன்', 'ஜம்ப்', 'கேட்ச்', 'ஈட்' போன்ற ஆர்டர்களுக்கு கீழ்படியும். அட்வான்ஸ் டிரெயினிங், ஆறு முதல் எட்டு மாத பப்பிகளுக்கு வழங்கப்படும். இதில், ரிங் ஜம்ப், ஹை ஜம்ப், லெக் மிடில் வாக் போன்ற சாகசங்களை செய்யும்.பிரிமீயம் பயிற்சி, சில வகை நாய்களின் புத்திசாலித்தனத்திற்காக வழங்கப்படும். ஓராண்டு வரை, நல்ல உணவு, பயிற்சியில் இருக்கும் நாய்கள், அதன் ஆயுட்காலம் வரை ஆரோக்கியமாக வளரும். டாக் ஷோக்களுக்கு அனுப்புவதற்கும் பயிற்சிகள் உண்டு. தற்போது வரை, 1,500 நாய்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன்,'' என்றார்.