| ADDED : ஜன 27, 2024 09:29 AM
பூனைகள் எப்போது துாங்கும்... எது அதன் இயல்பு...'ஒன் அண்ட் டூ' போக எப்படிப் பழக்குவது... அதைப் பற்றி விளக்குகிறார் பூனை வளர்ப்பு ஸ்பெஷலிஸ்ட் ஸ்மிர்தி: பூனைகள், குழந்தைகள் போலத்தான்... பகலில் நன்றாகத் துாங்கும். ராத்திரியில ரொம்ப 'ப்ரிஸ்க்'கா சுத்திட்டு இருப்பாங்க. பூனைக்குன்னு தனி டாய்லெட் வச்சுக்கலாம்; அங்க மண் கொட்டி வச்சுட்டா, அதுல 'ஒன் அண்ட் டூ' போய்க்குவாங்க. அந்த மண்ணை அப்பப்போ மாத்திக்கலாம்.முடி அதிகமுள்ள பூனைகளைப் பராமரிக்கிறது ரொம்ப ஈஸி. தொடர்ந்து சீப்பு வச்சு சீவிட்டு இருந்தா முடி கொட்டுறது குறையும். இப்பிடி சீவுறது, நம்ம மேல அன்பை அதிகப்படுத்தும். பூனைகளை அடிக்கடி குளிக்க வைக்கத் தேவையில்லை. ஏன்னா அவுங்களே அவுங்களை சுத்தம் பண்ணிக்குவாங்க.பூனையோட கலர்தான், அதன் ஆளுமையோட வெளிப்பாடு. அதே நிறத்தை வச்சுதான் ஆண், பெண் அடையாளம் பார்க்க முடியும். பாரசீக பூனைகளுக்குதான் மவுசு அதிகம். ஆனா, அந்த நாட்டுல அந்த பூனைங்க இல்லை. ஆப்பிரிக்கா, இந்தியாவுல மட்டும்தான் இருக்கு.