உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 5 - ஸ்டார் பெற்ற இன்விக்டோ

5 - ஸ்டார் பெற்ற இன்விக்டோ

'மாருதி சுசூகி' நிறுவனத்தின் 'இன்விக்டோ' எம்.பி.வி., கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 5 - ஸ்டார் பெற்றுள்ளது. இது, 5 - ஸ்டார்களை பெறும், இந்நிறுவனத்தின் மூன்றாவது கார் ஆகும். இதற்கு முன், டிசையர், விக்டோரிஸ் கார்கள் 5 - ஸ்டார் பெற்று இருந்தன. இது, பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 30.43 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில், 49க்கு 45 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த கார், 'டொயோட்டா ஹைகிராஸ்' எம்.பி.வி., காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த காரின் விலை, 24.97 லட்சம் முதல் 28.61 லட்சம் ரூபாய் வரை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ