| ADDED : ஜூன் 26, 2024 08:37 AM
'சிட்ரான் இந்தியா' நிறுவனம், 'சி - 3 ஏர்கிராஸ்' தோனி எடிஷன் என்ற சிறப்பு எடிஷன் எஸ்.யு.வி.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு எடிஷன் என்பதால், வெறும் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த கார், 5 சீட்டர், 7 சீட்டர், மேனுவல் மற்றும் ஆட்டோ டிரான்ஸ்மிஷன்கள் என அனைத்து வகையிலும் வருகிறது.இந்த காரை வித்தியாசப்படுத்த, காரின் பக்கவாட்டில், இந்திய முன்னால் கேப்டன் தோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்சி எண் '7' பொறிக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், புதிய நிற சீட் குஷன் மற்றும் கவர், முன்புற டாஷ் கேம் மற்றும் மின்னும் சிட்ரான் அடையாள சில் ப்ளேட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.மற்றபடி உபகரணங்களை பொறுத்த வரையில், எந்தவித மாற்றமும் இல்லை.
இன்ஜின்- 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் ஹார்ஸ் பவர்- 110 எச்.பி.,டார்க்- 190 என்.எம்.,பூட் ஸ்பேஸ்- 444 லிட்டர்மைலேஜ்- 18 - 19 கி.மீ.,