UPDATED : நவ 19, 2025 08:12 AM | ADDED : நவ 19, 2025 08:06 AM
'ஐச்சர்' நிறுவனம், 'பிரோ எக்ஸ்' என்ற புதிய இலகுரக சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. மின்சார மாடலில் உள்ள இந்த வாகனம், தற்போது டீசலில் வந்துள்ளது. டிரைவர் உட்பட மூன்று பேர் வரை இதில் பயணிக்கலாம். இது, 3 மற்றும் 3.5 டன் என இரு எடைகளில் கிடைக்கிறது. சேசிஸ் கேபின், பிளாட் டெக், ஹை டெக், கண்டெய்னர் என நான்கு உடல் அமைப்புகளில் வருகிறது. மாடலுக்கேற்ப, சரக்கு தொட்டியின் நீளம் 2.9 மற்றும் 3.3 மீ அளவில் கிடைக்கும். இந்த வாகனம், 1.5 முதல் 2 டன் எடை வரை சுமக்கும் திறனுடயது.
இதில், 'ஐ449 எக்ஸ் பேக்டர்' என்ற 2 லிட்டர், 4 - சிலிண்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு 80 கி.மீ., வரை செல்லும். கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட கேபின், டிரைவரின் நிலை கண்காணிப்பு அமைப்பு, வாகன நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பிரத்யேக செயலி, முன்புற டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகள், செமி எலிப்டிக்கல் லீப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வந்துள்ளன. tவாகனத்தை 30,000 கி.மீ.,க்கு ஒரு முறை பராமரித்தால் போதும் என இந்நிறுவனம் கூறுகிறது.